தமிழகம்

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு: குறைபாடு இருந்தால் தகுதிச் சான்று மறுப்பு

செய்திப்பிரிவு

பள்ளி வாகனங்களில் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சிறப்பு ஆய்வு நந்தனத்தில் நேற்று தொடங்கியது. இதில், பாதுகாப்பு குறைபாடு இருந்த 19 வாகனங்களுக்கு தகுதிச் சான்று (எப்.சி) வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.

இதன்படி சென்னையில் கே.கே.நகர் மற்றும் வளசரவாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகங் களுக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்கள் நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் கொண்டு வரப்பட்டு நேற்று ஆய்வு மேற் கொள்ளப்பட்டன. இதில், கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அதி காரி பி.பாஸ்கரன், வளசரவாக்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி எம்.தரன், எழும்பூர் வருவாய் கோட்ட அதிகாரி சிவருத்ரய்யா, காவல்துறை உதவி ஆணையர்கள் சந்திரன், அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியன், வாகன ஆய்வாளர்கள் அருணாச் சலம், சுரேஷ்குமார், பூங்குழலி, விஜயா ஆகியோர் மொத்தம் 97 வாக னங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் பி.பாஸ்கரன், எம்.தரன் ஆகியோர் கூறியதா வது: பள்ளி வாகனங்களில் 16 வித மான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால், ஒரு வாரத்தில் சரிசெய்யுமாறு உத்தர விடப்படும்.

இதில், வாகனங்களின் படிக்கட்டு கள், அவசரகால கதவுகள், தீய ணைப்பு கருவிகள் உள்ளிட்டவை சரியாக இல்லாமல் இருக்கும் 19 வாகனங்களுக்கு தகுதிச்சான்று (எப்.சி) வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அடுத்த ஒரு வாரத்துக்குள் சரிசெய்து வருமாறு உத்தரவிட்டுள்ளோம். மேலும், சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தாத பள்ளி வாகனங்களை இயக்கவும் அனுமதிக்கப்படாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT