தமிழகம்

திருவொற்றியூர் அருகே ஆயிரம் ஏக்கரில் கருவேல மரங்கள் அகற்றும் பணி: 15 தனியார் தொண்டு நிறுவனங்கள் கூட்டு முயற்சி

செய்திப்பிரிவு

திருவொற்றியூர் அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை 15 தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நேற்று தொடங்கின.

தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, பல்வேறு பகுதி களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத் திலும் இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவொற்றியூர் அருகே சடையங்குப்பம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் உட்பட சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை, 15 தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நேற்று தொடங்கின.

‘ஆனந்த மார்க்கம்’ என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ‘அன்பு நெஞ்சங்கள்’ அறக்கட்டளை உள்ளிட்ட 15 தனியார் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து மேற்கொண்டுள்ள இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, நீதிபதிகள் வசந்த குமார் மற்றும் திருமால் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

சடையங்குப்பம் பகுதி ஏரிக்கரை, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள மரங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும் பகுதிகளில் பயன் தரும் மற்ற மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளதாக தனியார் தொண்டு நிறுவனத்தினர் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT