ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:
முத்துகிருஷ்ணன் தற்கொலையில் மர்மம் இருப்பதாக மாணவனின் தந்தையே வெளிப்படையாக பேட்டி யளித்திருக்கிறார். உடனடியாக மத் திய அரசு இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
அதிமுக துணை பொதுச் செய லாளர் டி.டி.வி.தினகரன்:
முத்து கிருஷ்ணன் மரணம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கவனம் செலுத்தி, உண்மையை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் உடனடியாக விசாரணை செய்து கொலையா, தற்கொலையா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
முத்துகிருஷ் ணனின் திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
தொடரும் சாதி, மதம் சார்ந்த வன்முறைக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடு வதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணமும், அவரது குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும்.
மமக தலைவர்ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் ந.சேதுராமன், எஸ்டிபிஐ கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி உள்ளிட்டோரும் விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.