தமிழகம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

செய்திப்பிரிவு

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவை கோவை மற்றும் சென் னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வைச் சேர்ந்தவர் மதியழகன். மின்சாதன பொருட்களை விற் பனை செய்யும் கடை வைத்துள் ளார். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள்கள் பூமா (17), கார்த்திகா. பிளஸ் 2 முடித்துள்ள பூமா, பொறியியல் படிக்க திட்ட மிட்டு இருந்தார்.

இந்நிலையில் மதியழகன் தனது குடும்பத்தாருடன், பொள்ளாச்சி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, கடந்த 9-ம் தேதி பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். சித்தோடு அருகே புறவழிச் சாலையில் சென்ற போது சாலையோரம் உள்ள மண் குவியலில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மதியழகன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஈரோடு கே.எம்.சி.ஹெச். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மயக்க நிலையில் இருந்த பூமாவை பரிசோதித்தபோது, அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கள் மகளின் உடல் உறுப்பு களை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, மாணவி யின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் 2 கண்கள் அகற்றப்பட்டு, 2 சிறு நீரகங்கள் கே.எம்.சி.ஹெச். மருத்து வமனைக்கும், கல்லீரல் கோவைக் கும், நுரையீரல் சென்னைக்கும் அனுப்பப்பட்டன.

உடல் உறுப்புகளை எடுத் துக் கொண்டு கோவைக்கு ஆம்பு லன்ஸ் வாகனங்கள் விரை வாக செல்லும் வகையில் போக்கு வரத்து போலீஸார் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

SCROLL FOR NEXT