மன்னார்குடி கீழ 3-ம் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் உதயகுமார். பிரபல வழக்கறிஞ ரான இவரது அலுவலகம் வீட்டில், வருமான வரி திருச்சி மண்டல அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு வினர் நேற்று சோதனை நடத்தினர். தொடர்ந்து, வழக்கறிஞர் உதய குமாரிடம் விசாரணை நடத்தினர்.
மாலை 4 மணியில் இருந்து இரவு 8.50 மணிவரை நடைபெற்ற இந்த சோதனையில், ஆவணங்கள் ஏதேனும் சிக்கியதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, வருமான வரித் துறையினர் பதிலளிக்காமல் சென்றனர்.
வழக்கறிஞர் உதய குமார் கூறும் போது, “வருமான வரித் துறையினர் சில விளக்கங்களை மட்டுமே கேட்டனர். ஆவணங்கள் ஏதும் எடுத்துச்செல்லவில்லை. என்னிடம் உள்ளது அனைத்துமே சுமார் 100, 150 வருடங்கள் தாண் டிய வழக்குகளின் கோப்புகள் தான்” என்றார்.
வழக்கறிஞர் உதயகுமார் மன்னார்குடியில் உள்ள பிரபல ஆளுங்கட்சி பிரமுகரின் சொத்துகள் தொடர்பான ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.