கும்மிடிப்பூண்டி அருகே ஆரம் பாக்கத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீ ஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து லாரி ஒன்று நேற்று அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாக வந்தது. போலீஸார் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி நிற்காமல் சென்றது.
இதையடுத்து, போலீஸார் விரட்டிச் சென்று பஞ்செட்டி அருகே லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரியில் இருந்த ஓட்டுநர் உள்பட 6 பேரும் தப்பி ஓடினர். லாரியில் சுமார் 10 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி. இதையடுத்து, லாரி மற்றும் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
செம்மரக் கட்டைகள் ஆந்திரா வில் எந்தப் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டன. இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.