தமிழகம்

சமூகவலைத்தளத்தில் ஓ.பி.எஸ் தான் நாயகன்: ராமராஜன்

செய்திப்பிரிவு

இன்று சமூகவலைத்தளத்தில் ஓ.பி.எஸ் தான் கதாநாயகன் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நடிகர்கள் ராமராஜன் மற்றும் தியாகு ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் இல்லத்துக்குச் சென்று இவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் ராமராஜன் பேசியது, "முன்பெல்லாம் அரசியலில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியாது. இப்போது மக்களுக்கு தெரியாமல் அரசியலில் எதுவுமே நடப்பதில்லை. இன்று மக்களால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ, அது தற்போது நடந்துவிட்டது. இனி எப்படி நடக்க வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாத போது கூட, 2016ம் ஆண்டில் அரும்பாடுபட்டு ஆட்சியமைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்று பம்பரமாக செயல்பட்டவர் ஓ.பி.எஸ். மக்களுக்கு எந்த குறைவந்தாலும், உடனடியாக தீர்த்து வைத்தவர். இன்று சமூகவலைத்தளத்தில் ஓ.பி.எஸ் தான் கதாநாயகன்" என்று பேசினார் ராமராஜன்

SCROLL FOR NEXT