திமுகவுடன் மக்கள் தேமுதிக இணையும் விழா, ஜூலை 17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என மக்கள் தேமுதிக ஒருங் கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 27-ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், மக்கள் தேமுதிகவை கலைத்துவிட்டு திமுகவில் இணை வது எனது முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவது குறித்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 10.50 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத் தில் சந்திரகுமார் சந்தித்து திமுக வில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்தார். அப்போது மு.க.ஸ்டாலின், மக்கள் தேதிமுக நிர்வாகிகள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச். சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் சந்திரகுமார் கூறிய தாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தேமுதிகவை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்தோம். தனியாக கட்சி நடத்தும் அளவுக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இல்லாததால் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட திமுகவில் இணைய முடிவு செய்தோம். இன்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் நாங்கள் திமுகவில் இணைந்தோம்.
ஜூலை 17-ம் தேதி சேலத் தில் திமுகவுடன் மக்கள் தேமுதிக இ ணையும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் தேமுதிக மட்டுல்லாது தேமுதிக நிர்வாகிகளும், தொண் டர்களும் பல்லாயிரக்கணக்கில் இணைய உள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அதிருப்தியில் உள்ள தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து பேசுவோம். அவர்களை திமுகவில் இணைக்க இருக் கிறோம். தேமுதிக கரைந்து விட்டது. இனி அந்தக் கட்சிக்கு எந்த எதிர்காலமும் இல்லை.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.