தமிழகம்

ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

செய்திப்பிரிவு

ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லார்-அடர்லி அருகே மண் சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வந்த மலை ரயில் திருப்பி அனுப்பப்பட்டது. தண்டவாளத்தில் சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தரைப்பாலம் சேதம்:

மேட்டுப்பாளையத்தில் இன்று அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை கன மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் கோத்தகிரி தரைப்பாலம் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி செல்ல வேண்டிய வாகனங்கள் குன்னூர் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT