கிராம கோயில்களில் நடக்கும் திருவிழாக்களின்போது, டான்ஸ் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தருமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள் ளது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் ஊர் கோயில் திருவிழாவின் போது டான்ஸ் நிகழ்ச்சி நடத்த அனுமதி தருமாறு காவல் துறையி னருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், அத்தகைய உத்தரவு எதை யும் காவல் துறையி னருக்கு பிறப்பிக்க இயலாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
தீர்ப்பு விவரம்:
இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கும் முன்பு, மனுதார ருக்கு இத்தகைய கோரிக்கைகளை எழுப்ப சட்டப்படியான உரிமை உள்ளதா என்பது குறித்த முடிவுக்கு நீதிமன்றம் முதலில் வர வேண்டும். ஆனால் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்யும் பலர், தாங்கள் யார் என்றே கூறுவதில்லை. டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருமாறு கோயில் நிர்வாகத்தைக் கவனிக்கும் யாரும் விண்ணப்பிப்பது இல்லை.
இத்தகைய மனுக்களை தாக்கல்செய்வோர் யாரும் கோயில் நிர்வா கங்களில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தனி நபர்கள்.
கோயில் அருகே பொது இடத்தில் டான்ஸ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தங்களுக்கு உள்ள உரிமை அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருவது காவல் துறையினரின் கடமை
என்பதை வலியுறுத்தும் எந்தச் சட்டப் பிரிவையும் இந்த மனுதாரர் கள் யாரும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டுவது இல்லை.
பெண்களுக்கு எதிரான அனைத்து வடிவிலான பாகுபாடு களையும் ஒழிப்பதற்கான ஐக்கிய
நாடுகள் சபையின் நடவடிக்கை களில் இந்தியாவும் பங்கேற்றுள் ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது என்பது பொது நெறிகளுக்கும், கண்ணியத்துக்கும் இழைக்கப்படும் தீங்கு ஆகும். ஆகவே, கோயில் திருவிழாக்களில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் படுகின்றன.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதேபோல் சென்னை அண்ணா சாலை அருகேயுள்ள ஓட்டல் ஒன்றில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரிய மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.