தமிழகம்

பவானியில் மீண்டும் தண்ணீர் பிரச்சினை: பாலக்காடு ஆட்சியரை சந்திக்க சாவடியூர் மக்கள் முடிவு?

செய்திப்பிரிவு

பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில், ஏராளமான விவசாயிகள் மோட்டார் பம்ப்செட் வைத்து பவானி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சுகின்றனர். இதனால், சாவடியூர், கூட்டுப்பட்டி பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என்று மற்றொரு பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அட்டப்பாடி பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப் பாடு நிலவுவதால், மோட்டார் மூல மாக நீர் உறிஞ்சக்கூடாது. மீறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், தங்களுக்குள் ளேயே முறைவைத்து தண்ணீரைப் பயன்படுத்த முடிவு செய்தனர். பின்னர், மழை வந்த தால் பவானியில் நீர்வரத்து அதி கரித்தது. இதையடுத்து, முறைப் பாசனத்தைக் கைவிட்டனர்.

தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் வறட்சி நிலவுகிறது. பவானியில் நீர்வரத்து குறைந்த தால் அட்டப்பாடி மேல்பகுதி விவசாயிகள் மோட்டார் மூலமாக தண்ணீரை உறிஞ்சத் தொடங்கி யுள்ளனர். இதனால், சாவடியூர், கூட்டுப்பட்டி பகுதிகளில் மீண்டும் பவானி வறண்டுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கீழ் பகுதி விவசாயிகள், பாலக்காடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மேல்பகுதி விவ சாயிகள் கூறும்போது, “அப்பர் பவானியிலிருந்து தெற்கே பிரியும் வரகாற்றில் இப்போது நீர் வரு கிறது. அதேபோல, சிறுவாணி யிலும் நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கீழ் பகுதி விவசாயிகள் பிரச்சினை செய்வது ஏன் எனத் தெரியவில்லை. எங்களுக்கான மின் இணைப்பை துண்டிக்க முயற்சி நடப்பதாகக் கருதுகிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT