தமிழகம்

தமிழக தலைமைச் செயலர் வீட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக தலைமைச் செயலர் பி. ராமமோகன ராவ் வீட்டின் முன் மத்திய ரிசர்வ் போலீஸார் (சிஆர்பிஎப்) வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று (புதன்கிழமை) காலை, சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தற்போதும் நடைபெற்றுவரும் நிலையில் பகல் 12 மணியளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 15 பேர் ராமமோகன ராவ் வீட்டுக்கு வந்தனர். இதனால் அங்கு கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

துணை ராணுவ படையைச் சேர்ந்த இருவர் மட்டும் ராமமோகன ராவ் வீட்டுக்குள் சென்றனர். மற்றவர்கள் வெளியில் காத்திருக்கின்றனர். அப்பகுதியில் தமிழக காவல்துறையினரும் இருக்கின்றனர்.

மம்தா கண்டனம்:

இதற்கிடையில், தமிழக தலைமைச் செயலர் பி. ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விளக்கம்:

தமிழக தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "அமலாக்கப்பிரிவின் அதிகாரத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்கிறார்கள். இன்னார் வீட்டில்தான் சோதனை மேற்கொள்ளமுடியும் என்று எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.

தலைமைச் செயலர் ராமமோகன ராவின் வீடு | படம்: ம.பிரபு.

</p>

SCROLL FOR NEXT