தமிழகம்

மறைமலைநகர் மனை ஒதுக்கீட்டுக்கு நவம்பரில் குலுக்கல்: சிஎம்டிஏ அறிவிப்பு

செய்திப்பிரிவு

மறைமலைநகர் திட்டத்தில் 105 மனைகளையும் மணலி புதுநகர் திட்டத்தில் 82 மனைகளையும் ஒதுக்கீடு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் குலுக்கல் நடத்தப்பட்டது. எண் குளறுபடி காரணமாக குலுக்கல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட மறைமலைநகர் திட்ட மனைகள் ஒதுக்கீட்டுக் கான குலுக்கல் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் பால்ஃபோர் சாலையில் உள்ள லாய்டி கலையரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

குறைந்த வருவாய் பிரிவில் (எல்ஐஜி) 22, நடுத்தர வருவாய் பிரிவில் (எம்ஐஜி) 6, உயர் வருவாய் பிரிவில் (எச்ஐஜி) 7 என மொத்தம் 35 மனைகளை ஒதுக்கீடு செய்வதற்காக இந்த குலுக்கல் நடத்தப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை www.cmdachennai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அறிவித்துள் ளது.

SCROLL FOR NEXT