தமிழகம்

உயர் நீதிமன்ற வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோடு, மெகாபுரத்தைச் சேர்ந்தவர் கேசவன் (41). உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரை கடந்த 19ம் தேதி கலங்கரை விளக்கம் அருகே 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது.

இதில், பலத்த காயம் அடைந்த அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மெரினா இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் வழக்கு பதிந்துள்ளார். முதல்கட்டமாக கேசவனை கொலை செய்ய முயன்ற வழக்கில் கடந்த 22ம் தேதி அரும்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான மயிலாப்பூர் அருணகிரி (36), கோடம்பாக்கம் சந்தீப் குமார் (24), திருவேற்காடு அஜித்குமார் (20), தினேஷ் (24) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

          
SCROLL FOR NEXT