கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசினர் கூர்நோக்கு மையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 10 சிறுவர்கள் காயமடைந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசினர் கூர்நோக்கு மையம் (சிறுவர் சீர்திருத்தப் பள்ளி) உள்ளது. இளம் குற்றவாளிகள் சுமார் 75 பேர் இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 10-ம் தேதி இரவு சாப்பிடும்போது சிறுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலையடுத்து சிறுவர் களை கட்டுப்படுத்த காவல் துறையினர் அங்கு சென்றனர். அப்போது, சிறுவர்கள் சிலர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜூலை 11 தேதி, 29 சிறுவர்கள் கூர்நோக்கு மையத்தில் இருந்து தப்பிச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து சென்னை மற்றும் செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசினர் கூர்நோக்கு மையத்தில் நேற்றிரவு சிறுவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. 40 சிறுவர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 10 சிறு வர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மோதலை தடுத்தனர். காயமடைந்த 10 சிறுவர்களை சிகிச் சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த் துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
சிறுவர்கள் மோதல் சம் பவத்தை அடுத்து, கூர்நோக்கு மையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கீழ்ப்பாக்கம் அரசு கூர் நோக்கு மையத்தில் அடிக்கடி மோதல்கள் நடப்பது அங் குள்ள சிறுவர்களின் பெற்றோர் களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.