காசிமேடு பகுதியில் உள்ள குறுகிய தெருக்களில், சிறு வாகனங்களில் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
‘தி இந்து’ நாளிதழில் நேற்று முன்தினம், ‘குறுகலான தெருக்களில் கனரக வாகனத்தில் குடிநீர் விநியோகம்: போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் அவதி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: காசிமேடு புதுமனைக்குப்பம் பகுதியில் தினமும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களுக்கு, குடிநீரை சேமிக்கும் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், தினமும் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படு கிறது. தெருக்கள் குறுகலாக உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு, சிறு வாகனங்களில் குடிநீர் விநியோ கிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.