தமிழகம்

விவசாய தொழிலாளர்கள்- போலீஸார் இடையே கைகலப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்ததால் பரபரப்பு - மன்னார்குடியில் 200 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று தடையை மீறி வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்தனர். இதனால், போராட்டக்காரர்கள், போலீஸாரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, கடந்த 17-ம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் 4-வது நாளாக நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், மதியம் 12 மணியளவில் ஏற்கெனவே கொடுத்த கோரிக்கை மனுவின் நிலை என்ன என்று வட்டாட்சியரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரிடம் கேட்டனர். அனுமதி மறுத்ததால், அங்கு போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு, அலு வலகத்துக்குள் நுழைந்தனர். இத னால், போலீஸாருக்கும், போராட் டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த விவசாயத் தொழிலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தின்போது சில கோப்புகளும் கிழித்தெறியப் பட்டன. இந்த சம்பவங்களை கண்டித்து, வருவாய்த் துறை ஊழி யர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக கோஷங்கனை எழுப்பினர். பதிலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கோஷமிட்டனர்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி உட்பட 7 இடங்களில் நேற்று போராட் டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் விவசாய தொழி லாளர் சங்கத்தினர் 1,500 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அலுவலகம் செயல்படாது

இதுகுறித்து தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தெய்வநாயகி மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுதிர், அருள்ராஜன் உட்பட 100 பேர் அத்துமீறி அலுவலகத்துக்குள் புகுந்தது, அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், கோப்பு களை கிழித்தெறிந்ததாகவும் ஊழி யர்களை மிரட்டியதாகவும் தெரி வித்துள்ளார்.

தள்ளுமுள்ளு, போலீஸாருடனான கைகலப்பைத் தொடர்ந்து, மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து, அலுவலகத்தைவிட்டு வெளியேறினர். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாதவராஜ் கூறும்போது,

“இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஊழியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டோம். அதுவரை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் செயல் படாது” என்றார்.

SCROLL FOR NEXT