திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடந்தன.
இன்று பட்டு அலங்காரம், நாளை தங்கக் கவச அலங்காரமும், 27-ந் தேதி திருவாபரண அலங்காரமும், 28-ந் தேதி வெள்ளி கவச அலங்காரமும், 29-ந் தேதி சந்தன காப்பு அலங்காரங்களில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மேலும், தினசரி லட்சார்ச்சனையும் நடைபெறும். மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. 30-ம் தேதி காலை 11 மணிக்கு கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்விழாவில், தினசரி சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் புகழேந்தி மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.