தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது: அன்புமணி

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்றுஅன்புமணி கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறிய அன்புமணி, ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது.

வாக்கு இயந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாததால் வாக்குச்சீட்டு முறையே சிறந்தது. உலகில் வளர்ந்த நாடுகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது கிடையாது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அவசியமற்றதால் தள்ளிவைக்க வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT