தமிழகம்

பிரவீண் குமாருக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பதவி

செய்திப்பிரிவு

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் மாற்றப்பட்டு, தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட உத்தரவு வருமாறு:

தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, வேளாண் உற்பத்தித் துறை ஆணையர் மற்றும் வேளாண்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஏற்கெனவே, தேர்தல் துறை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை, ராஜேஷ் லக்கானி எரிசக்தி துறையின் செயலராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார். தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் துறை தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT