தமிழகம்

மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க வேண்டும்: முதன்மை அஞ்சல் துறை தலைவர்

செய்திப்பிரிவு

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என முதன்மை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி கூறினார்.

நாடு முழுவதும் அஞ்சல் வார விழா, அக்டோபர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இறுதி நாளான நேற்று அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் துறை ஆயுள் காப்பீட்டு தினமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி பேசியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் அஞ்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும், இந்த காலகட்டத்தில் நம்முடைய பணி எப்படி இருக்க வேண்டும். மக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவு செய்வது என்பதில்தான் நமது குறிக்கோள் இருக்க வேண்டும். அஞ்சல் காப்பீட்டில் பிரீமியம், போனஸ் அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT