தமிழகம்

அமைச்சர் எம்.சி.சம்பத் மருத்துவமனையில் அனுமதி முதல்வர் நலம் விசாரித்தார்

செய்திப்பிரிவு

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் எம்.சி.சம்பத் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் (58). நேற்று பகல் 1 மணி அளவில் இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த முதல்வர் ஓ.பன்னீர்செலவம் மருத்துவமனைக்குச் சென்று எம்.சி.சம்பத்தை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். எம்.சி.சம்பத்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT