இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. இதனால் சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், ''எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. இதனால் சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவு. தேர்தலுக்கு பின் அதிமுக முடங்கிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறுபவர்கள் அடிப்படை அரசியல் தெரியாதவர்கள். இரட்டை இலை சின்னம் தோற்றுப்போக கூடாது என்பதற்காக தான் இயற்கையே இந்த சின்னத்தை முடக்கியுள்ளது'' என்று தமிழிசை கூறியுள்ளார்.