தமிழகம்

பதவி பறிபோனாலும் கவலையில்லை: வி.சி.ஆறுக்குட்டி எம்எல்ஏ ஆவேசம்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக் குட்டி கூறியதாவது: ஓ.பன்னீர் செல்வத்தை பதவியை ராஜி னாமா செய்ய நெருக்கடி கொடுத் துள்ளனர். இதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.

சமீபகாலமாகவே சசிகலா தரப்பினரின் போக்கு சரியாக இல்லை. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ன தவறு செய்துவிட்டார்?.

பல பிரச்சினைகளின்போது ஓ.பன்னீர்செல்வம் மிகச் சிறப் பாகச் செயல்பட்டார். எனவே, அவரது தலைமையில் ஆட்சி தொடருவது சிறப்பாக இருக்கும். அதனால்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். இதனால், எனது எம்எல்ஏ பதவி பறிபோனாலும் கவலையில்லை. எதற்கும் பயப்படமாட்டேன்.

பொதுச் செயலாளர் பக்கம் வருமாறு பலமுறை அழைத்தார் கள். என்ன கொடுத்தாலும் எனது முடிவிலிருந்து மாறமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

இன்று 500-க்கும் மேற்பட் டோர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு வாழ்த்து களைத் தெரிவித்தனர். ஒருவர்கூட தவறான முடிவு எடுத்துவிட்டேன் என்று கூறவில்லை. இன்னும், பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் வரப்போகிறார்கள். இதை அவர்களால் தடுக்க முடியாது. மக்களின் ஆதரவும், வாக்களித்த தொண்டர்களின் ஆதரவும் இல்லாமல் யாரும் ஆட்சி நடத்த முடியாது என்றார்.

SCROLL FOR NEXT