தமிழகம்

அரசே தாது மணல் விற்க நடவடிக்கைகள் தொடக்கம்: நிதியமைச்சர் ஓபிஎஸ் தகவல்

செய்திப்பிரிவு

தாது மணலை அரசே விற்பதற் கான நடவடிக்கைகள் தொடங் கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அவர் கூறியதாவது:

திமுக உறுப்பினர் துரை முருகன் கூறியதைப்போல, வருவாயை கூட்டி, செலவை குறைத்து மதிப்பிட்டு, நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டவில்லை. அந்த அவசியமும் அரசுக்கு இல்லை. வருவாய் இல்லாத பிரிவுகளிலும், குறிப் பாக ‘பீச் மினரல்’ எனப்படும் கடலோரம் கிடைக்கும் கனிம வளம் போன்றவற்றில் வருவாயை அதிகரிக்க அரசே அந்த கனிம வளத்தை பிரித்து விற்கும் பொறுப்பை ஏற்கும் என முதல்வர் உத்தரவிட்டு, ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இருந்து அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

‘தாது மணலை அரசே விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்பது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வில்லை’ என துரைமுருகன் கூறியுள்ளார். தாது மணலை அரசே விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட் டுள்ளன. குறிப்பாக, சுரங்கத் தொழில் மூலம் பெறும் வருவாய், தமிழகத்தில் குறைவாக உள்ளது என பட்ஜெட்டில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT