தமிழகம்

கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி மாணவி சரண்யா: ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை

செய்திப்பிரிவு

கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சரண்யா என்ற மாணவி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் எஸ்.முருகராஜா வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா நகரில் கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி கடந்த 11 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட் டோர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கு பயிற்சி பெற்ற சரண்யா என்ற மாணவி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டில் பி.காம். படித்து முடித்து கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி மூலம் பயிற்சியை தொடங்கிய சரண்யா தற்போது வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். இதே நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அன்ஷுல் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 18-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு CrackingIAS.com என்ற இணையதளத்தை காணலாம் அல்லது 9884554654 என்ற எண்ணில் தொடர்புகொள்ள லாம்.

இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT