தமிழகம்

காவல் நிலைய வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கார்த்தி (எ) மீன் குழம்பு கார்த்திக்(21) காவல் நிலையத்திலேயே இறந்தார். போலீஸார் தாக்கியதால்தான் அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை கண்ணகி நகர் காவல் நிலையத்தின் முன்பு இருந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த கண்ணகி நகர் காவல் நிலைய போலீஸார், அதே பகுதி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கார்த்திக்கின் நண்பர்கள் தினேஷ் (எ) சுனாமி தினேஷ் (22), மோகன் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT