பிரதமர் மோடியை சந்திப்பதற் காக ஜூன் 14-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சியமைத்துள்ளது. கடந்த 23-ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
முதல்வராக பதவியேற்றவர்கள் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் முக்கியத் துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி, 6-வது முறையாக முதல்வராக பதவியேற் றுள்ள ஜெயலலிதா வரும் 14-ம் தேதி டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மக்களவையில் 37, மாநிலங்களவையில் 13 என நாடாளுமன்றத்தில் 50 எம்பிக்க ளுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் (ஜூன் 3) நடைபெற்ற தனது 93-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது காலை 10 மணிக்கே ஜெயலலி தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் திமுகவின் வெற்றி பறிக்கப்பட்ட தாக குற்றம்சாட்டினார். அதுபோல திருப்பூர் அருகே ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்திலும் பாஜக அரசு உண்மையை மறைப்பதாக குற்றம்சாட்டினார்.
இப்படிப்பட்ட சூழலில் ஜெயல லிதா டெல்லிக்கு செல்வது அரசியலில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி யும், ஜெயலலிதாவும் பல ஆண்டு களாகவே நண்பர்கள். பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் முறை யாக சென்னைக்கு வந்த மோடி, மரபுகளை மீறி முதல்வர் ஜெயல லிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்துக்கே சென்று சந்தித்தார். இது கடும் விமர்சனத் துக்கு உள்ளானது.
கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட் டோருக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மோடி வெளிநாடு சென்றதால் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில் முக்கியப் பிரச்சி னைகள் பற்றி விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா நேரம் கேட்டுள்ளதாகவும், வரும் 14-ம் தேதி பிற்பகலில் அவரை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகி றது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட சில அமைச்சர்களையும் ஜெயலலிதா சந்திப்பார் எனத் தெரிகிறது.
தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியு றுத்துவார் என்று கூறப்படுகிறது.
50 எம்பிக்கள், 133 எம்எல்ஏக் கள் இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசுத் தலை வர், துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக இருக்கும். எனவே, அதிமுகவை மத்திய அமைச்சரவையில் சேர்க்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.