தமிழகம்

அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாள் நீக்கம்

செய்திப்பிரிவு

அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாளை அப்பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பா.நாராயண பெருமாள் நீக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT