ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளராக மதிவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து, கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தில் இருசக்கர வாகன பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு, வாகன பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி, முதல்வரின் தொகுதியாகவே இல்லை. மிக மிக பின்தங்கிய தொகுதியாகத்தான் உள் ளது. இந்த தொகுதியில், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. தெரு விளக்குகள் எரிவதில்லை. சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இதையெல்லாம் தட்டிக் கேட்கும் அரசாக, இன்றைய அரசு இல்லை. ஆளும் கட்சி, தனது இரட்டை இலை சின்னத்தைப் பறிகொடுத்திருக்கிறது. கட்சி இருக்கிறதா என்றே தெரியவில்லை. அதனால் இத்தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். அவர் நிச்சயம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்பார் என்றார்.