தமிழகம்

அதிமுக எம்பிக்கள் சசிகலாவுடன் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட்டுக்காக நாடாளு மன்றம் கூடவுள்ள நிலையில் அதிமுக எம்பிக்கள் இன்று பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

மத்திய பட்ஜெட் வரும் பிப்ர வரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படு கிறது. இதற்காக நாடாளுமன்றம் இம்மாதம் 31-ம் தேதி கூடுகிறது. அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் மக்களவைத் தலை வர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடக்கிறது. இதில், அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, அதிமுக எம்பிக் கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசி கலாவை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். நாடாளுமன்ற கூட் டத்தொடரில் அதிமுகவின் நிலைப் பாடு, செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படு கிறது.

இது தொடர்பாக அதிமுக எம்பி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நாடாளு மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கட்சியின் பொதுச்செய லாளரை சந்திப்பது வழக்கம். இது இயல்பான கூட்டம்தான். வேறு ஒன்றுமில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT