தமிழகம்

சென்னை வன்முறை குறித்து பேட்டி: காவல் துணை ஆணையர் மீது விசாரணை

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த வன்முறைகள் குறித்து சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ் ணன் ஊடகங்களுக்கு பேட்டி அளித் தது தொடர்பாக விசாரணை நடத் தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட் சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசியதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர், குடியரசு தினத்தை சீர்குலைக்க முயன்றதால் தடியடி நடத்தப் பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ் ணன், அப்படி எந்தத் தகவலும் இல்லை என முதல்வரின் கருத்துக்கு மாறாக தெரிவித்துள்ளார். காவல் துறை சீருடையிலேயே ஊடக விவா தங்களில் அவர் கலந்துகொண்டுள் ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகின் 2-வது பெரிய மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அவருக்கு பதிலளித்த முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர் பாகவும், கடந்த 23-ம் தேதி நடந்த வன்முறைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வரு கிறது. எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டியபடி காவல் துணை ஆணையர் பேசியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT