சிவகாசியில் அரசு மதுபானக் கடையை பாமகவினரும், பொது மக்களும் சூறையாடி தீ வைத்த னர். இது தொடர்பாக, பாமக மாநில துணைத் தலைவர் திலக பாமா உட்பட 21 பேர் கைது செய் யப்பட்டனர்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே இருந்த டாஸ்மாக் மது பானக் கடை கடந்த 15 நாட் களுக்கு முன்பு கவிதா நகர் அருகே அய்யனார் காலனிக்கு மாற்றப் பட்டது. இந்த கடை தொடங்கப் பட்டது முதலே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கடையை திறக்க நேற்று பகல் 12 மணிக்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் திருப்பி அனுப்பினர். அதைத் தொடர்ந்து பாமக மாநில துணைத் தலைவர் திலகபாமா தலைமையில் அக்கட்சி யினரும், அப்பகுதி பொதுமக்களும் டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த னர்.
கடையில் இருந்த மது பாட் டில்களை அவர்கள் அடித்து உடைத்தனர். அங்கு இருந்த அட்டைப் பெட்டிகளுக்கு சிலர் தீ வைத்தனர். கடையில் இருந்த இருக்கைகள், அட்டைப் பெட்டிகள் ஆகியவற்றை வெளியே எடுத்து வந்து தீ வைத்தனர். இதில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் உடைந்தன.
தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது தொடர்பாக சிவகாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து பாமக மாநில துணைத் தலைவர் திலகபாமா மற்றும் 13 பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்தனர்.