மாநகராட்சி நிர்வாகத்தின் செயல் பாடுகள் குறித்து அறிந்து கொள் வதற்காக பயிற்சி ஐஏஎஸ் அதி காரிகள் 17 பேர் சென்னை வந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசோரி லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் இருந்து பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி கள் 17 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள், நேற்று காலை சென்னை ரிப்பன் மாளிகைக்கு சென்று மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். அவர்க ளுக்கு மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து விளக் கினார்.
அதைத் தொடர்ந்து தண்டையார் பேட்டை சர்மா நகரில் உள்ள காய்கறிக் கழிவுகளை பயன்படுத்தி பயோ-மெத்தனேஷன் மூலம் சமையல் எரிவாயு தயாரித்தல், அருள் நகர் பிரதான சாலையில் உள்ள மட்கும் குப்பையின் மூலம் இயற்கை உரம் தயாரித்தல், ஜி.என்.டி.சாலையில் உள்ள அம்மா உணவகம், மண்புழு உரம் தயாரித் தல், வார்டு-58-ல் காய்கறிக் கழிவு கள் மூலம் மீத்தேன் உற்பத்தி செய்து, மின்சாரம் தயாரித்தல் ஆகிய பணிகளை பயிற்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.