தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

அந்தமான் நிகோபார் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையோர பகுதிகளை அடையும் என முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக இந்த புயல் இருக்கும் எனவும், இதற்கு ஹூட் ஹூட் (HUDHUD) என பெயரிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT