கோவை வாளை யாறு அருகே தமிழக கேரள எல்லையில் ரயில் மோதி 20 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் யானை பலி யானது. இந்த வழித்தடத்தில் 10 கிமீ இடைவெளி யில் ஒரு மாதத்தில் 3 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன.
கோவை மதுக்கரையில் பொது மக்களுக்கு இடையூறு செய்வதா கக் கருதி, 40 நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்றை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து கராலில் அடைத்தது வனத்துறை. அதற்கு அடுத்த நாள், எட்டிமடை அருகே ரயிலில் அடிபட்டு பெண் யானை இறந்தது. மறுநாளே, கராலில் அடைக்கப்பட்ட யானை இறந்த து. 20 நாட்கள் கழித்து, கொல் லத்திலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் சிறப்பு ரயிலில் அடிபட்டு கேரளப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது.
இந்நிலையில், மதுக்கரை புதுப்பதி கிராமம் அருகே சோளக் கரை என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3 காட்டு யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன. அப்போது வந்த விரைவு ரயில், ஒரு பெண் யானை மீது மோதியது. படுகாயமடைந்த யானை, ரயில்வே பாதைக்கு கீழே உள்ள வழித்த டத்தில் நின்றது.
தகவல் அறிந்த வனத்துறையி னர், அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் காலை 9 மணிய ளவில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள பள்ளத்திலேயே விழுந்து இறந்தது.
கடந்த 2008-ல் இருந்து இந்தப் பகுதியில் ஒரே நேரத்தில் 3 யானைகளும், தாயுடன் குட்டி யானை ஒன்றும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன.