செப்டம்பர், அக்டோபர் மாதத் தில் நடைபெறவுள்ள எஸ்எஸ் எல்சி துணைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் விண்ணப்பிக் கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு தனித் தேர்வர்கள் செப்டம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை (4, 5-ம் தேதிகள் நீங்கலாக) தேர்வுத்துறை சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சேவை மையங்களின் பட்டியல் கல்வி மாவட்ட வாரியாக தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப் பட்டிருக்கிறது.
தேர்வுக் கட்டணம் ரூ.125. அதோடு கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையத்திலேயே செலுத்தி விட வேண்டும். பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில்தான் தேர்வு எழுத வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப் பத்தைப் பதிவுசெய்த பிறகு தேர்வர் களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப் படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன் படுத்தித்தான் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, ஒப்புகைச்சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில்
மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் செப்டம்பர் 16, 17-ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அறிவிப்பு, பின்னர் தனியாக வெளியிடப்படும்.
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியுள்ளார்.