தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க திமுகவில் மாவட்ட வாரியாக மேற்பார்வையாளர்கள் நியமனம்: க.அன்பழகன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலையொட்டி கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக திமுக சார்பில் மாவட்டந்தோறும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் மாவட்ட வாரியாக ஆற்ற வேண்டிய பணிகளை மேற் பார்வையிடுவதற்காக திமுக தலைமையகம் சார்பில் மேற் பார்வையாளர்கள் நியமிக்கப்படு கின்றனர். மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வை யாளர்களின் விவரம் வருமாறு:

தஞ்சை - பொன்.முத்துராம லிங்கம், சேலம் - திருவிடைமருதூர் ராமலிங்கம், திண்டுக்கல் - சுப.சீத்தா ராமன், விருதுநகர் - தி.அ.முகமது சகி, தூத்துக்குடி, கன்னியாகுமரி - எஸ்.ஆஸ்டின், ஈரோடு, திருப்பூர் - டி.எம்.செல்வகணபதி, சிவகங்கை - குத்தாலம் பி.கல்யாணம், தரும புரி - டி.செங்குட்டுவன்.

திருநெல்வேலி - சூர்யா வெற்றி கொண்டான், திருநெல்வேலி மாநகர் - பூச்சி முருகன், திருவண் ணாமலை - ஆ.த.சதாசிவம், கோவை, நீலகிரி - டாக்டர் த.மஸ் தான், நாமக்கல் - வி.காசிநாதன், விழுப்புரம் - ப.தாயகம் கவி, ராமநாதபுரம் - பெ.குழந்தைவேலு, தேனி - எஸ்.காந்திராஜன், கிருஷ்ணகிரி - ப.கணேசன், நாகை - பா.நம்பிச்செல்வன்.

மதுரை மாநகர் - இரா.நீலகண்டன், கடலூர் - சி.வி.எம்.பி.எழிலரசன், திருவாரூர் - ஜெ.பச்சையப்பன், காஞ்சிபுரம் - கே.ஜெ.சரவணன், திருவள்ளூர் - எம்.ஷாஜகான், மதுரை - வீ.கண்ண தாசன், அரியலூர், பெரம்பலூர் - வீ.அருண், கரூர் - கே.சந்துரு, புதுக்கோட்டை - ப.முத்துக்குமார், திருச்சி - ஜி.தேவராஜன், வேலூர் - ஆர்.டி.சேகர் ஆகியோர் மாவட்ட மேற்பார்வையாளர்களாக இருந்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிப்பர்.

இவ்வாறு க.அன்பழகன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT