தமிழகம்

சட்டமன்ற கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பா.ம.க. அறிவிப்பு

செய்திப்பிரிவு

இன்று மாலை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற அவசரக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பா.ம.க. அறிவித்துள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கும், மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது பா.ம.க. இருப்பினும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்று மாலை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற அவசரக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பா.ம.க. அறிவித்துள்ளது.

தங்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜெ.குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பா.ம.க. தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT