அவினாசி-அத்திக்கடவு திட் டத்தை நிறைவேற்றுவதற்கு முன் பாக பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: அவினாசி - அத்திக் கடவு திட்டத்தை நிறைவேற்றுவ தற்கு முன்பாக பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறை வேற்றுவது மிக முக்கியம். இதன் மூலம் ஏற்கெனவே உள்ள பாசன நிலங்கள் மட்டுமின்றி, புதிதாக பாசனங்களும் பெற முடியும். மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசே இத்திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே அளவு சரக்கு மற்றும் சேவை வரி விதிக் கும் முறை வரவேற்கத்தக்கது. ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர்கள் கைது செய்யப்படுவது, பாலாறு பிரச்சினையை திசை திருப்பு வதற்காக நடத்தப்படும் நாடகம். பாலாறு பிரச்சினையில் தமிழகத் தின் அனைத்து அரசியல் கட்சி களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி ஆந்திர முதல்வரையும், பிரதமர் மோடியையும் சந்திக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து கட்சிகள் கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் நடத்தி இந்த நட வடிக்கையை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அநாகரிகமான விவாதத்தையும், தனிமனித விமர்சனத்திலும் ஈடுபடுவது தவறானது என்றார்.