தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை அடையாளம் காட்ட திருச்சி, தஞ்சை, சேலம், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட்டங் களிலிருந்து அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் நேரில் வந்து சிலைகளை பார்த்தனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீனதயாள் வீடு மற்றும் கிடங்கில் சோதனை நடத்தி 285 ஐம்பொன் மற்றும் கற்சிலைகள், 96 ஓவியங்களை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இந்த சிலை களை வெளிநாடுகளுக்கு கடத்து வதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மான்சிங் (58), குமார் (58), ராஜாமணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த தீனதயாள் கடந்த 3-ம் தேதி சரண் அடைந்தார்.
தீனதயாள் வீட்டில் கைப் பற்றப்பட்ட சிலைகள் அனைத் தும் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப் பட்டவை. இந்த சிலைகள் தங்கள் கோயிலில் காணாமல் போன சிலைகளா? என்பதை நேரில் பார்த்து உறுதி செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிர்வாக அலுவலர்களுக்கும் இந்து அற நிலையத்துறை சார்பில் உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள சந்திரமவு லீஸ்வரர் கோயில் மற்றும் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் நிர்வாகிகள் நேரில் வந்து கைப்பற்றப்பட்ட சிலைகளை பார்த்து சென்றனர்.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தில் இயேசு நாதரின் மரச்சிற்பம் காணாமல் போனது. தீனதயாள் வீட்டில் இருந்தும் இயேசுவின் மரச்சிற்பம் கைப்பற்றப்பட்டது. இதனால் தேவாலய நிர்வாகிகளும் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து சிலைகளை பார்த்து சென்றனர்.
நேற்று திருச்சி, தஞ்சை, சேலம், விழுப்புரம், திருவண்ணா மலை மாவட்டத்தில் இருந்து கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் நேரில் வந்து பார்த்தனர். இதில் யாருமே தங்களுடைய கோயிலில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதாக கூறவில்லை.