தமிழகம் முழுவதும் பொறியியல் முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கள் கிழ மை) ஆரம்பிக்கின்றன. கல்லூ ரிகளில் ராகிங் சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை அண்ணா பல்க லைக்கழகம் எடுத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. பொது கலந்தாய்வு மூலம் 90 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கு கின்றன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) ஆரம்பிக்கப்படு கின்றன. ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. மற்றொரு கல்லூரியான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்பு தொடக்கத்துடன் சேர்த்து அறிமுக வகுப்பும் நடத்தப்படும்.
கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் ராகிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. ராகிங் செயலில் ஈடுபட்டால் அளிக்கப் படும் தண்டனை, அபராதம் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு அனைத்து சீனியர் மாணவ-மாணவிகளுக்கும் வழங் கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் ராகிங் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். மேலும், ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமா டும் வாகனமும் பணியில் ஈடுப டுத்தப்படும். இதன்மூலம் பேரா சிரியர்கள் ராகிங் செயல்களால் ஏற்படு்ம் பாதிப்புகள், அதற்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து ஒவ்வொரு கல்லூரிக் கும் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
இவ்வாறு கணேசன் கூறினார்.
இதற்கிடையே, பொறியியல் கல்லூரிகளில் ராகிங் சம்பவங் கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முதல்வர்கள் தலை மையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கவும், முதல் ஆண்டு சேரும் மாணவ- மாணவிகளுக்கு தனி விடுதி வசதிக்கு ஏற்பாடு செய்யவும் அனைத்து கல்லூரி நிர்வாகங் களுக்கும் தேவையான அறிவு ரை வழங்கப்பட்டிருப்ப தாக அண்ணா பல்கலைக்கழக மாணவர் விவகாரங்கள் மையத் தின் இயக்குநர் பேராசிரியர் இளையபெருமாள் தெரிவித் தார்.