அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1,095 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல் மீன்வளர்ப்பியல் ஆகிய பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று இரவு வெளியிட்டது. இறுதி தேர்வுபட்டியல் தனியே வெளியிடப்படும்.