இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான 2 நாள் இலவச பயிற்சி முகாம் சென்னை அண்ணாநகர், திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாடமியில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 4) தொடங்குகிறது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் 47 பின்னடைவுக் காலியிடங்கள் உள்ளிட்ட 15,711 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை வரும் மே 21-ம் தேதி நடத்தவுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள், நேர மேலாண்மை, திட்டமிடுதல் தொடர்பான பயிற்சி இம்முகாமில் விளக்கப்படும். தேர்வர்களுக்கு பாடக்குறிப்பு வழங்கப்படுவதுடன், மாதிரித் தேர்வும் நடத்தப்படும்.
இப்பயிற்சி முகாமில் காவல்துறை உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு தேர்வு சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிப்பார்கள். தகுதியுள்ள மாணவர்கள் தங்களது சுய
விவரங்களுடன் அண்ணாநகர், திருமங்கலம், ஜெ.ஜெ.காம்ப்ளக்ஸில் உள்ள ஃபோக்கஸ் அகாடமிக்கு நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். விவரங்களுக்கு 9442722537, 9445581806 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.