எரிபொருள் சிக்கன விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணியை முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தொடங்கி வைத்தார்.
எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், ‘சக்ஷம்-2017’ என்ற பெயரில் ஒரு மாதத்துக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. சுமார் 130 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சைக்கிள் ஓட்டினர். முன்னாள் டிஜிபி லத்திகா சரண் இந்த சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
சவேரா ஹோட்டல் குழுமத் தின் இணை துணைத் தலைவர் நீனா ரெட்டி, சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், சர்வதேச கேரம் விளையாட்டு வீரர் ஜெயஸ்ரீ, இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் (மண்டல சேவை) எஸ்.செந்தில்குமார், பொது மேலாளர் (லூப் விற் பனை) டி.ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.