ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு 3 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷை பொது பார்வை யாளராகவும், ஐஆர்எஸ் அதிகாரி அபர்னா வில்லூரியை தேர்தல் செலவின பார்வையாளராகவும், ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்குமார் வர்மாவை காவல் பார்வையாள ராகவும் நியமித்து இந்திய தேர் தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது. பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் 23-ம் தேதியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், செலவின பார்வையாளர் 27-ம் தேதி பொறுப்பேற்கவும் உத்தர வில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பொது பார்வை யாளரை 9445036578 என்ற எண் ணிலும், செலவின பார்வை யாளரை 9445036584 என்ற எண் ணிலும், காவல் பார்வையாளரை 9445036579 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும் அந்த பார்வையாளர்கள் தங்கி யுள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் 044 25333098 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.