பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:
ஆளுநரின் நடவடிக்கை நியாயமானது என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக அவர், சட்டப்பேர வையைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதில் யாருக்கு பெரும் பான்மை இருக்கிறதோ அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். காவல்துறையை அனுப்பி, கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை விடுவிக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியும்.
பிரதமர் மோடி அதிமுகவை உடைக்க நினைக்கிறார் என்றும் பாஜக தமிழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது என்றும் ம.நடராஜன் குற்றம் சாட்டினார். காவிமயமாக்காமல், கருப்புமயமாக்கவா நாங்கள் இருக்கிறோம். காவிமயமாக்கத் தான் செய்வோம். ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னால் பாஜக இல்லை. ஆனால், தமிழக அரசுக்கு துணையாக மத்திய அரசு உள்ளது என்றார்.