புதுச்சேரியில் துணைநிலை ஆளு நர் கிரண்பேடிக்கும், ஆட்சியா ளர்களுக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் விவகாரத்தில், பேரவைத் தலைவர் வைத்தி லிங்கம் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை காத்திருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறை இயக்குநரான கணேசனை நகராட்சி ஆணையராக பொறுப்பு ஏற்க தலைமை செய லாளர் மனோஜ் பரிதா உத்தர விட்டிருந்தார்.
இந்த சம்பவத்தின்போது டெல்லியில் இருந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் திங்கள் கிழமை நகராட்சி அலுவலகத்தில் கணேசன் பணியில் இருந்தபோது அங்கு வந்த சந்திரசேகரன் ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் கொடுத்த உத்தரவை காண்பித்து பதவியேற்றார். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் கணேசன் தகவல் தெரிவித்தார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பேரவை விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை இயக்குநருக்கு வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதம ரிடம் கிரண்பேடி பற்றி முறையிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. துணைநிலை ஆளுநர், ஆட்சியாளர்களுக்கு இடையே மோதல் முற்றிய நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறிய தாவது:
யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. தற்போது நடந்துகொண்டு இருக்கும் சம்ப வம் மனக்கசப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. நான் டெல்லிக்கு சென்ற நேரத்தில் நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை காத் திருப்போர் பட்டியலில் வைக்கும் அளவு அவசரம் என்ன என்ற கேள்வி எழுகிறது?
விதிமுறைகளை மீறி ஆட்சியா ளர்களுக்கு ஆதரவாக செயல்படும் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
அரசு நிதியை தவறாக பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே நான் தடையாக இருக்கிறேன். மக்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன். டெல் லிக்குச் சென்று என்னைப் பற்றி புகார் தெரிவித்தாலும் கவலை யில்லை.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விவாதித்து வருகிறேன். மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவேன். எக்காரணம் கொண்டும் ரப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்பட மாட் டேன்; வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.