தமிழகம்

டிடிவி தினகரன் டெல்லிக்கு திடீர் பயணம்

செய்திப்பிரிவு

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், கடந்த ஜூன் 2-ம் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். அதைத் தொடர்ந்து கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் எனவும் அறிவித்தார்.

பின்னர், அடுத்தடுத்த நாட் களில் எம்எல்ஏக்கள் பலர் அவரை சந்தித்து பேசி வந்தனர். இதனால் அதிமுகவில் தொடர் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையே அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் குற்றச்சாட் டுப்பதிவு செய்வதற்காக டிடிவி தினகரன் நேற்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், நேற்று இரவு டிடிவி தினகரன் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். பயணத்துக்கான காரணம் தெரியவில்லை

SCROLL FOR NEXT