கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் 7.16 லட்சம் சதுர அடி நிலம் மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளது.
மேயர் சைதை துரைசாமி பொறுப்பேற்று நேற்றும் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி மாநகராட்சியின் மூன்று ஆண்டு சாதனைகளை மாமன்றக் கூட்டத்தில் விளக்கிக் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கோட்டூர் கிராமத்தில் செயிண்ட் பாட்ரிக் பள்ளி நிறுவனத்திட மிருந்து ரூ. 1045 கோடி மதிப்புள்ள 4,35,600 சதுர அடி நிலம், நந்தனம் டர்ன்புல்ஸ் சாலையில் ரூ. 214 கோடி மதிப்புள்ள 71,400 சதுர அடி நிலம், வேளச்சேரி பீனிக்ஸ் மால் நிர்வாகத்திடமிருந்து ரூ.168 கோடி மதிப்புள்ள 70,120 சதுர அடி நிலம் உள்ளிட்ட பல இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1750 கோடி ரூபாயாகும். மேலும், ரூ. 2394 கோடி மதிப்புள்ள திறந்தெவெளி நிலங்கள் சென்னை மாநகராட்சியால் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.